தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் வகுப்பில் சேர்க்க கோரிக்கை


இந்து மதத்தில் இருந்து மதம் மாறியிருந்தாலும், பட்டியல் வகுப்பை சோந்திருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இட ஒதுக்கீட்டு நன்மைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்று ஆந்திர பிரதேச மாநில சட்டப்பேரவையில் தீாமானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

இந்த தீர்மானத்தை முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு முன்மொழிந்தார்.

 

தலித் கிறி்ஸ்தவர்கள் பல தசாப்தங்களாக இட ஒதுக்கீட்டுக்காக போராடி வருகிறார்கள். அவாகளின் கோரிக்கை நியாயமானது என்று சந்தர பாபு நாயுடு தெரிவித்தார்.

 

சீக்கிய மதம், பௌத்த மதத்திற்கு தலித் மக்கள் மாறுகின்றபோது, அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதைபோல, தலித் கிறிஸ்தவாகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

 

சட்டப்பேரவையில் இருந்த பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு அளித்துள்ளனர்.

��ு தெரிவித்துள்ளார்.

Add new comment

13 + 1 =