தமிழ் நாட்டில் பொங்கல் வரை பருவமழையா?


தமிழகத்தில் ஜனவரி 15-ம் தேதி வரை பருவமழை பெய்யலாம் என்று தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல் வெளியிட்டுள்ளார்.

 

மேலும் 8 காற்றழுத்த தாழ்வு நிலை காணப்படுவதால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாக இருக்காது என்று அவர் கூறியுள்ளார்.

 

கஜா புயலால், காவிரி டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

 

ஆனால், வடகிழக்கு பருவமழை வழக்கமாக பெய்கின்ற அளவை விடவும் குறைவாகவே மழை பெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தமிழகத்தில் தற்போது நிலவும் மேலடுக்கு சுழற்சி 29-ம் தேதிக்குள் அரபிகடல் சென்று விலகிவிடும்.

 

அதற்கு பிறகும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. அந்தமான் பகுதியில் இது உருவாகலாம் என தெரிகிறது.

 

தமிழகம் அல்லது இலங்கையை நோக்கி நகர விடாமல் சுமத்ரா தீவு அருகே மற்றொரு வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலமும் உள்ளது.

 

29-ம் தேதி இந்த நிலை மாறி தமிழகத்தை நோக்கி அது நகரலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

அவ்வாறு நிகழுமானால், இலங்கைக்கு தெற்காக நகர்ந்து மாலத்தீவு வழியாக தமிழகத்தை நோக்கி இது வரலாம் என்று செல்வகுமார் கூறியு்ளளார்.

தமிழகத்தை பொறுத்தவரை ஜனவரி 15-ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

ஜனவரி 15-ம் தேதி வரை உருவாக இருக்கின்ற 8 குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் இரண்டு தீவிரமடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Add new comment

7 + 3 =