தமிழகத்தில் அழிவுகளை பார்வையிடும் நடுவண் அரசுக்குழு


காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை கடந்த வாரம் கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடி புரட்டி போட்டது.

 

அதன் காரணமாக இந்த மாவட்டங்களில் லட்சக்கணக்கான மரங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்தன.

 

பெரும் பேரழிவு ஏற்பட்டு்ள்ள நிலையில், டெல்லியில் இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடியை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து நிவாரண தொகை கோரினார்.

 

இதனால், பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு அமைக்கப்பட்ட நிலையில், மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையில் நேற்றிரவு சென்னை வந்த நடுவண் அரசு குழு சனிக்கிழமை காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களை சந்தித்துப் பேசியுள்ளனர்.

 

அதன் பின்னர் 2 குழுக்களாக பிரிந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதங்களை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளது.

Add new comment

1 + 16 =