தமிழகத்தின் 13 மத்திய சிறை கைதிகளுக்கு அரசு காப்பீட்டு திட்டம்


தமிழகத்தில் இருக்கின்ற 13 மத்திய சிறைகளின் கைதிகள் அனைவரையும் அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ப்பதற்கு சிறைத்துறை முடிவு செய்துள்ளது.

 

சிறைக் கைதிகளுக்கு காப்பீடு திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த இருப்பது இதுவே முதல் முறை.

 

இதனால், பிரதான் மந்திரி சுரக்சா பிமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா ஆகிய இரு மத்திய அரசு காப்பீட்டு திட்டங்களின் பலன்கள் தமிழக சிறைகளில் தண்டனை அனுபவித்து வருகின்ற பெரும்பாலான கைதிகளுக்கு கிடைக்கும்.

 

இறப்புக் காப்பீடு, விபத்துக் காப்பீடு மற்றும் ஊனமுற்றோருக்கான காப்பீடு ஆகியவை இந்த திட்டத்தில் அடங்குகிறது.

 

ஏறக்குறைய 3 ஆயிரத்து 600 கைதிகள் இன்னும் 20 நாட்களில் மத்திய அரசு காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவிக்கபப்டுகிறது.

 

ஆயுள் தண்டனை மற்றும் அதற்கும் குறைவான சிறை தண்டனை அனுபவிக்கும் கைதிகள் இந்தக் காப்பீட்டைப் பெறுவார்கள் என்று தெரிகிறது.

Add new comment

6 + 8 =