தங்கள் நிலத்தில் கோவில் கட்டுமானத்தை எதிர்க்கும் பென்னடிக் சபையினர்


வியட்நாமின் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் தங்கள் நிலத்தில் கோவில் கட்டுவதை பென்னடிக் சபையின எதிர்த்து வருகின்றனர்.

 

ஹூயேயில் வாழும் நகயன் தாங் யுயன் என்பவர் ஒரு முன்னோர் கோவிலை தியன் அன் மடாலயத்திற்கு சொந்தமான நிலத்தில் கட்டி வருகிறார்.

 

குயே நகருக்கு வெளியே இருக்கும் இந்த நிலத்தின் உரிமையை நிரூபிக்க தன்னிடம் ஆவணங்கள் உள்ளதாக அவர் தெரிவித்து வருகிறார்.

 

யயனுடைய போலியான ஆவணங்களை உள்ளூர் அரசு திரும்பபெற வேண்டும் என்று இந்த மடாலயத்தின் அதிபர் அருட்தந்தை லுயிஸ் கொன்சாகா தாங் ஹூங் தான் என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

1940ம் ஆண்டு தொடங்கி பென்னடிக் சபையினருக்கு சொந்தமாக இருந்து வருகின்ற மடாலய நிலத்தில் கட்டுமானத்தை உள்ளூர் அரசு நிறுத்த வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்ர்.

 

இந்த பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு, மடாலய நிலத்தை பிறருக்கு தாரை வார்த்துள்ள அதிகாரிகளை நீதிக்கு முன் கொண்டு வர வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Add new comment

2 + 0 =