டுடெர்டயின் கண்டனத்திற்கு எதிராக திரளும் பிலிப்பீன்ஸ் கிறிஸ்தவர்கள்


திருச்சபைக்கு எதிராக குறிப்பாக பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே தெரிவிக்கும் கருத்துகளுக்கு எதிராக ஜனவரி 25-ம் தேதி மணிலா தெருக்களில் பரபப்புரை போராட்டம் நடைபெற்றது.

 

மனித சங்கிலியை உருவாக்கிய மூவாயிரம் கத்தோலிக்க மற்றும் சீர்திருத்த சபையினர், தங்களின் இறைநம்பிக்கையிலும், செயல்பாட்டிலும் ஒன்றிப்பை காட்டும் வகையில் மெழுகுதிரி கொளுத்தி இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றுள்ளது.

 

தங்களின் கடவுள் முட்டாள் இல்லை என்பதை பிரகடனப்படுத்தவே தாங்கள் இவ்வாறு கூடியதாக அவர்கள் தெரிவித்தனர்.

 

அதிபர் ரொட்ரிகோ டுடெர்டேயின் பொய்யான சாட்சிகள், வெறுக்கத்தக்க கதைகள் மற்றும் அப்பட்டமான பொய்கள் தங்களின் இதயங்களையும், மனித உணர்வுகளையும் காயப்படுத்தியுள்ளதாக இவர்கள் தெரிவித்தனர்.

 

திருச்சபையின் போதனைகளை கேள்விக்குட்ப்படுத்தியும், கடவுளை முட்டாள் என்று அழைத்தும் பிலிப்பீன்ஸ் அதிபர் ரொ்ட்ரிகோ டுடெர்டே கத்தோலிக்க திருச்சபை தலைவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்,

 

ஆயர்களை கொள்ளை அடித்து கொலை செய்ய வேண்டுமென சொல்லும் அளவுக்கு அதிபர் டுடெர்டே கருத்துக்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Add new comment

6 + 3 =