டிரம்ப் தலைமையிலான அரசு தீவிரவாதக் குழு - மதுரோ


அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் தீவிரவாதக் குழுவைப் போன்றது என்று வெனிசுவேலா அதிபர்  நிக்கோலஸ் மதுரோ விமர்சித்துள்ளார்.

 

அவர்கள் கைப்பற்ற நினைக்கிறார்கள். அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு தீவிரவாதக் குழு போன்றதாக இருப்பதால்? மக்கள் அதனை தங்கள் கருத்தால் தோற்கடிப்பார்கள் என்று மதுரோ கூறியுள்ளார்.

 

தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் வெனிசுவேலாவும் ஒன்று. முன்னராக அதிபராக இருந்த ஹக்கோ சாவேஸ் கடந்த 2013-ஆம் ஆண்டு இறந்த பின்னர் அதிபராக நிக்கோலஸ் மதுரோ பதவி ஏற்றார்.

 

கடந்த மே மாதம் நடந்த தேர்தலிலும் நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார். இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து மதுரோ வென்றதாக சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன.

 

வெனிசுலா கடும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் அரசியல் நிலையற்ற தன்மையால் திண்டாடி வருகிறது. மதுரோவின் ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

எதிர்க்கட்சித் தலைவர் ஜூயன் கைய்டோ அமெரிக்கா ஆதரவுடன் தன்னைதானே இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டுள்ளதால்,  நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

 

சர்வதேச நாடுகளின் உதவியுடன் வெனிசுவேலா மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி வழங்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்.

Add new comment

1 + 19 =