டிஎன்ஏ தொழில்நுட்ப ஒழுங்கு மசோதா நிறைவேற்றம்


டிஎன்ஏ தொழில்நுட்ப ஒழுங்கு மசோதா மக்களவையில் பதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

மக்களவையில் டிஎன்ஏ (பயன் மற்றும் பயன்பாடு) மசோதாவை தக்கல் செய்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்த்தன் பாதிக்கப்பட்டவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், சந்தேகிக்கப்படும் நபர்கள், விசாரணைக் கைதிகள், காணாமல் போனவர்கள் மற்றும் இதர நபர்கள் உள்ளிட்ட நபர்களின் அடையாளத்தை அறிய இந்த மசோதா வழிவகை செய்யும் என்று கூறினார்.

 

மேலும் தேசிய டிஎன்ஏ தகவல் வங்கி மற்றும் மாநிலங்களில் மண்டல டிஎன்ஏ தகவல் வங்கிகளை அமைக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

 

தகவல் பாதுகாப்பு, ரகசியத் தகவல்கள், தனிநபர் ரகசியம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் இந்த மசோதா உதவும்.  

 

இது சட்டமாகும்போது நாட்டில் குற்றவியல் குற்றங்களைத் தடுக்கவும் உதவும்.

 

மேலும் காணாமல் போன குழந்தைகளைக் கண்டறிதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு இது தீர்வாக இந்த மசோதா அமையும்.

 

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு சிலர் இந்த மசோதா

அவையின் நிலைக்குழுவுக்கு அனுப்பப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Add new comment

2 + 0 =