ஜமால் கொலையில் சௌதியின் விசாரணையில் வெளிப்படை இல்லை - துருக்கி


பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்ட குற்ற வழக்கில் சௌதி நடத்தி வருகின்ற விசாரணையில் வெளிப்படை தன்மை இல்லை என்று துருக்கி குற்றஞ்சாட்டியுள்ளது.

“சௌதி வெளிப்படை தன்மை இல்லாமல் இந்த விசாரணையை நடத்தி வருகிறது. இந்த கொலையில் தொடர்புடையவருக்கு தண்டனை வாங்கி கொடுத்து, இந்த கொடிய படுகொலைக்கு சௌதிதான் உரிய  நீதி வழங்க வேண்டும் என்று துருக்கி அதிபர் ரசெப் தையிப் எர்துவான் கூறியுள்ளார்.

 

இந்நிலையில், சௌதி பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியின் இஸ்தான்புல் துணை தூதரகத்தில் கொல்லப்பட்டது  தொடர்பான விசாரணையில் ஐக்கிய நாடுகள் சபை முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

 

சௌதி அரேபிய அதிகாரிகள் இந்த கொலையை திட்டமிட்டு மிருகத்தனமாக செய்துள்ளதாகவும், துருக்கி அரசு இந்தக் கொலையை பற்றி விசாரிக்க அனுமதி அளிக்காமல் 13  நாட்கள் சௌதி அரேபியா தாமதப்படுத்தியது என்றும் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Add new comment

4 + 7 =