ஜனநாயகத்தை காக்கவே ரணிலுக்கு மீண்டும் பதவி – சிறிசேன


இலங்கையில் ஜனநாயகத்தை பாதுகாக்கவே ரணில் விக்கரசிங்கேவுக்கு மீண்டும் தலைமையமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

இலங்கையில் தலைமையமைச்சராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் கடந்த அக்டோபர் மாதம் 26-ந் தேதி ரணிலை தலைமையமைச்சர் பதவியில் இருந்து சிறிசேனா நீக்கினார்.

 

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை புதிய தலைமையமைச்சராக நியமித்தார்.

 

இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ரணில் தானே பிரதமராக தொடர்வதாக தெரிவிக்க அரசியல் சிக்கல் நிலவியது.

 

எனவே, நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு புதிதாக தேர்தல் நடத்த சிறிசேனா உத்தரவிட்டார்.

 

அவரது செயல்பாடு சட்ட விரோதம் என தீர்ப்பளித்த உச்ச நீதிமனற்ம் ராஜபக்சே செயல்பட தடை விதித்தது.

 

பெரும் இறுபறிக்கு பிறகு, ராஜபக்சே பதவியில் இருந்து விலகினார்.

 

இதையடுத்து ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் தலைமையமைச்சராக அதிபர் சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

 

நாடாளுமன்ற பாரம்பரியம், ஜனநாயகம் ஆகியவற்றை பாதுகாக்கவே ரணிலை மீண்டும் தலைமையமைச்சராக நியமித்துள்ளதாக சிறிசேனா குறிப்பிட்டுள்ளார்.

Add new comment

13 + 3 =