சௌதி பத்திரிகையாளர் கொலை – 5 பேருக்கு தூக்கு தண்டனை?


துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சௌதி அரேபிய துணை தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் சௌதி அரேபியாவை சேர்ந்த 5 பேருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென அரசு தரப்பு வழக்கறிஞர் கோரியு்ள்ளார்.  

 

சௌதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி படுகொலை விவகாரம் சர்வதேச அளவில் பல்வேறு சர்ச்சைகைளை தோற்றுவித்து வருகிறது.

 

சௌதி அரசை விமர்சித்தும், அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்த ஜமால் கசோஜி, துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சௌதி அரேபிய துணை தூதரகத்துக்குச் சென்ற பின்னர் காணாமல் போனார்.  

 

துருக்கியில் காதலித்து வந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவதற்கு, முந்தைய மனைவியின் விவாகரத்து தொடர்பாக சௌதி தூதரகம் சென்றுள்ளார்.

 

பத்திரிகையாளர் கசோஜியின் படுகொலை  சர்வதேச அளவில் சௌதி அரேபியாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஜமால் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக துருக்கி குற்றஞ்சாட்டியது. அதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் அந்நாடு கூறியது.

 

இதன் காரணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட உலகின் பல தலைவர்கள் சௌதி அரேபியாவுக்கு எதிராக குரல் எழுப்பினர்.

 

முதலில் கசோஜி வேலையை முடித்துவிட்டு தூதரகத்தை விட்டு சென்றுவிட்டதாக தெரிவித்த சௌதி அரேபியா, பின்னர் இஸ்தான்புலில் உள்ள சௌதி தூதரகத்தில் ஜமால் கொலை செய்யப்பட்டதாக ஒப்புக்கொண்டது.

 

இந்த 5 சந்தேக நபாகளுக்கும் மரண தண்டனை அளிக்குமாறு தெரிவித்திருக்கு்ம் சௌதி அரசு வழக்கறிஞர், ஜமால் கொலையில் சௌதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு இந்த படுகொலையில் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அதிகாரிகளுக்கு அவர் எந்த உத்தரவை வழங்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

Add new comment

14 + 1 =