சௌதி அரேபியா-பாகிஸ்தான் இடையே 20 பில்லியன் டாலர் ஒப்பந்தம் கையழுத்து


சௌதி அரேபியா-பாகிஸ்தான் இடையே 20 பில்லியன் டாலர் ஒப்பந்தம் கையழுத்தாகியுள்ளது.

 

சௌதி அரேபியா இளவரசர் முஹம்மது பின் சல்மான் இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக பாகிஸ்தான் வந்தார்.

 

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானின் தலைமையமைச்சது இம்ரான் கான் சமீபத்தில்தான் சௌதி அரேபியா சென்றிருந்தார்.

 

அவர் விடுத்த அழைப்பின்பேரில் பாகிஸ்தான் வந்தார் சௌதி அரேபியா இளவரசர் முஹம்மது பின் சல்மான்.

 

இந்த வேளையில் சுற்றுலா மேம்பாடு உள்ளிட்ட முக்கிய துறைகள் தொடர்பாக இருநாடுகளுக்கு இடையில் 8  புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.

 

பாகிஸ்தானில் குவாடர் துறைமுகத்தில் இயங்கிவரும் சௌதி அரேபியாவுக்கு சொந்தமான பெட்ரோலிய சுத்திகரிப்பு தொழிற்சாலையை 1000 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பில் மேம்படுத்துவது உள்பட 20 பில்லியன் கோடி டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

Add new comment

1 + 3 =