சௌதியில் கடும் மழை, 12 பேர் பலி


சௌதி அரேபியாவில் கடும் மழைபொழிவால் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர்.

 

கடந்த சில தினங்களாக சௌதியில் பெய்துவரும் கனமழையால் அதன் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன.

 

பலியாகியுள்ள 12 பேரில், 10 பேர் தபுக் நகரைச் சேர்ந்தவர்கள். 200க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று சௌதி மன்னரின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

 

வெப்பச் சலனம் காரணமாக பல நாடுகளில் ஓராண்டு பெய்ய வேண்டிய மழை ஒருசில நாட்களுக்குள் பெய்து பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திவிடுகிறது.

 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கத்தாரில் ஓராண்டு பெய்ய வேண்டிய மழையின் அளவு கடந்த சனிக்கிழமையன்று, ஒரேநாளில் பெய்ததால், தலைநகர் தோஹா உள்ளிட்ட பல்வேறு நகரங்களை வெள்ளம் சூழ்ந்தது.

Add new comment

7 + 5 =