செல்பேசிகள் பயன்பாட்டை குறைக்க வங்கதேச இளைஞர்களுக்கு அறிவுரை


வங்கதேச இளம் கத்தோலிக்கர்களுக்கு வழங்கியுள்ள தவக்கால செய்தியில், இயேசு கிறிஸ்துவோடு உறவில் மிகவும் அருகில் வர ஆலோசனை வழங்கி டாக்கா உயர் மறைமாவட்ட காதினால் பேட்ரிக் டி‘ரோசாரியோ அழைப்புவிடுத்துள்ளார்.

 

உயிர்ப்பு பெருவிழா வரை எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் இளம் கத்தோலிக்கர்கள் தங்களின் செல்போன்களை பகலில் பயன்படுத்தாமல் இருக்க வேண்டுமென அவர் கோரியு்ளளார்.

 

அவாகளிடம் தனிச்சிறப்புமிக்க தியாகத்தை செய்ய கேட்கப்போவதாக கூறிய அவர், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை செல்போன்களை பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டுமேன அறிவுரை கூறியு்ளளார்.

 

செல்பேசியில் செலவிடும் நேரத்தை பிறரிடமும், இயேசு கிறிஸ்துவோடு உறவுகளை நெருக்கமாக பயன்படுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

 

வங்கதேசத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் பயணம் மேற்கொண்ட போது கேட்டுக்கொண்ட கருத்தையே இந்த கர்தினாலின் தவக்கால செய்தியும் எதிரொலிக்கிறது.

 

சாம்பல் புதன்கிழமையன்று மத்திய டாக்காவில் புனித செபமாலை அன்னை கத்தோலிக்க தேவாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியின் மறையுரையில் கர்தினால் ரோசாரியோ இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

Add new comment

13 + 0 =