செயற்கை நுண்ணறிவு செய்தி தொகுப்பாளர்கள் அறிமுகம்


உலகத்திலேயே முதல் முறையாக சீனாவில் செய்தி தொகுத்தளிக்கும் செயற்கை நுண்ணறிவு எந்திர மனிதகர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 

செய்திகள் வாசிக்கும் செற்கை நுண்ணறிவு ரோபாக்களை சின்ஹுவா செய்தி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

 

சீன செய்தி வாசிப்பாளர்களின் தோற்றத்தில் இவை உருவாக்கப்பட்டுள்ளன.

 

இவை திரையில் ஓடும் எழுத்துகளைப் படிக்கும். செய்திகளுக்கு ஏற்றவாறு தொடர்ந்து அவற்றின் வாய் அசையும் வகையில் இந்த ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

 

ஆங்கிலம் மற்றும் சீன மொழி என இரு மொழிகளில் செய்திகளை வாசிக்க தனித்தனியாக இரண்டு செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

தேடுதல் பொறிகள் மற்றும் குரலைக் புரிந்துணர்தல் தொழில்நுட்பங்களின் மூலம் இவை உருவாக்கப்பட்டுள்ளது.

 

 

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட உயரிய தொழில்நுட்பங்களில் உலகளாவிய அளவில் முதலிடத்தைப் பிடிக்கத் துடிக்கிறது சீனா.

Add new comment

3 + 2 =