செயற்கைக்கோள் அழிப்பு - விண்வெளியில் குப்பை -- இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா


விண்வெளியில் உருவாகும் குப்பைகளால் பாதிப்பை ஏற்படலாம் என்று அமெரிக்க பாதுகாப்பு துறையின் செயலாளர் பேட்ரிக் ஷனாஹன் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 

செயற்கைக்கோள்களை இடைமறித்து அழிக்கும் ஏவுகனையை இந்தியா சோதனை செய்திருப்பதை தொடாந்து இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

 

செயற்கைக்கோள்களை அழிக்கும் ஏவுகணை தொழில்நுட்பத்தை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக இந்திய jதலைமையசைமச்ர் நரேந்திர மோதி மார்ச் 27ம் தேதி புதன்கிழமை அறிவித்தார்.

 

விண்வெளியில் குப்பைகளை உருவாக்கக் கூடாது என தாழ்வான உயரத்தில் இருக்கும் சுற்றுப்பாதையில் சோதனையை மேற்கொண்டதாகவும், இந்தியாவின் இச்சோதனையை அமெரிக்கா ஆராய்ந்து வருவதாகவும் பேட்ரிக் ஷனாஹன் தெரிவித்தார்.

 

இந்தியா செயற்கைக்கோளைத் தடுத்து அழிக்கும் ஏவுகணை தொழில்நுட்பத்தை பெற்றுள்ள நான்காவது நாடாகியுள்ளது.

 

இதே போன்ற சோதனையை கடந்த 2007ஆம் ஆண்டு சீனா மேற்கொண்டது, சர்வதேச அளவில் எச்சரிக்கை செய்தியாக அமைந்தது.

Add new comment

10 + 1 =