செபத்தில் இறைவனின் அன்பை இனம்காணுங்கள் – திருத்தந்தை


கிறிஸ்தவர்கள் பிறரைவிட மேலானவாகள் அல்ல. ஆனால், இறைவன் தங்களின் தந்தை என்று அவர்களுக்கு தெரியும் என்று திருத்தந்தை பிரானசிஸ் கூறியுள்ளார்.

 

நன்மைக்காக இந்த உலகம் தாகம் கொண்டு நற்செய்திக்காக கத்திருக்கையில், நன்மையின் ஒளிக்கீற்றுக்களை சிந்திக்க அழைக்கப்பட்டவர்கள் கிறிஸ்தவர்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

 

கர்த்தர் கற்பித்த செபத்தின் தொடர் கருத்துரைகளை நிறைவு செய்கையில் திருத்தந்தை பிரான்சிஸ் இதனை கூறியுள்ளார்.

 

ஜனவரி 2ம் தேதி நடைபெற்ற கியூபா தேசிய சர்க்கஸ் நிகழ்ச்சியின்போது, பார்வையாளர்களிடம் பேசிய திருத்தந்தை, மத்தேயு எழுதிய நற்செய்தியில் இயேசு செபிக்க கற்றுக்கொடுத்ததை மலைப்பொழிவின் மையமாக வைத்திருப்பது பற்றி தெரிவித்துள்ளார்.

 

கிறிஸ்தவர்கள் பிறரை விட மேலானவர் அல்ல. மாறாக தாங்கள் பாவிகள் என்று அறிந்து வைத்திருப்பவர்கள் என்று கூறிய திருத்தந்தை கிறிஸ்தவர் ஒருவர் இறைவனை தந்தையாக கொண்டு, உலகிலுள்ள நன்மைகளை சிந்தனை செய்பவர்கள் என்று கூறியுள்ளார்.

Add new comment

5 + 5 =