சென்னை தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க 122 கோடி


கோடைகாலத்தில் தமிழ் நாட்டின் தலைநகர் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால், இதை சமாளிக்க ரூ.122 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

கடந்த ஆண்டை விட 24 விழுக்காடு குறைவாக அதாவது 336.5மிமீ மழை மட்டும் இந்த ஆண்டு மழை பெய்துள்ளது.

 

அதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளின் இருப்பு குறைந்து வருகின்றது.

 

எனவே, கோடைக் காலத்தில் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

தமிழகத்தின் கோடைகால குடிநீர் தேவையை சமாளிக்க ஒதுக்கப்பட்ட ரூ. 158 கோடியில், சென்னைக்கு மட்டும் ரூ. 122 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Add new comment

5 + 2 =