சென்னையில் இருந்து பெங்களூருக்கு அதிவேக தொடர்வண்டி சாத்தியமே


சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கு அதிவேக தொடர்வண்டி இயக்க முடியும் என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது.

 

இந்தியாவின் தெற்கில் அமைந்துளள மாநிலங்களில் சற்று அருகில் அமைந்துள்ள சென்னை மற்றும் பெங்களூருவில் வாழும் மக்கள்தொகை தலா சுமார் ஒரு கோடியை எட்டயிருகிறது.

 

பெங்களூரில் இருந்து மேற்க திசையில் 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மைசூர் நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது.

 

இந்த மூன்று நகரங்களுக்கு அடையில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக அதிவேக தொடர்வண்டி போக்குவரத்து முயற்சிகள் நடந்து வருகின்றன.

 

சென்னை-பெங்களூரு-மைசூர் இடையே தற்போது அதிக வேகத்தில் செல்லக்4டிய ஒரே தொடர்வண்டி சதாப்திதான்.

 

சதாப்தி தொடர்வண்டியில் சென்னையிலிருந்து மைசூருக்கு செல்ல ஏழு மணி நேரமாகிறது.

 

சென்னையில் இருந்து பெங்களூருக்கு 5 மணி நேரம் ஆகிறது.

 

மெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் தொடர்வண்டிகளக்கு, சென்னையில் இருந்து பெங்களூருக்கு 6 முதல் 7 மணிநேரம் வரை ஆகிறது.

 

இந்த பின்னணியில் இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் மார்ட்டின் நே இந்திய தொடர்வண்டி துறை வாரிய தலைவர் அஸ்வினி லோகானியிடம் ஆய்வறிக்கை ஒன்றை வழங்கியுள்ளார்.

 

அதில, சென்னை மற்றும் மைசூர் இடையே 435 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிவேக தொடர்வண்டி போக்குவரத்து பாதை அமைக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த அதிவேக தொடர்வண்டி ஒரு மணிநேரத்திற்கு அதிகபட்சமாக 320 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.

 

84 சதவீத தண்டவாளம் பாலத்திற்கு மேலேயும், 11 சதவீத தண்டவாளம் சுரங்கமாகவும், எஞ்சியவை தரையிலும் என 435 கிலோமீட்டர் தொலைவில் இந்த தொடர்வண்டி போக்குவரத்து பாதை அமைக்க முடியும் என்று இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Add new comment

7 + 0 =