சூறாவளியால் பாதிக்கப்பட்டோருக்கு 30 ஆயிரம் வீடுகள்


2013ம் ஆண்டு பிலிப்பீன்ஸின் மத்திய பகுதியில் அதிக பேரழிவை உருவாக்கிய சூப்பர் சூறாவளி ஹா்யானால் பாதிக்க்பபட்டோருக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க 600 லட்சம் டாலர் செலவு செய்துள்ளதாக கத்தோலிக்க திருச்சபையின் சமூக அமைப்பான பிலிப்பின்ஸ் காரிதாஸ் தெரிவித்துள்ளது.

 

உறைவிடங்களை தவிர, 2,653 கைவினைஞர்களை காரிதாஸ் பிலிப்பின்ஸ் உருவாக்கியுளளது.

 

பாதுகாப்பு மிகக் கட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை 16,354 பேருக்கு வழங்கியுள்ளது.

 

147 வீட்டு உரிமையாளர்கள் கூட்டமைப்பையும் இது உருவாக்கியுள்ளது.

 

திருச்சபையின் மிக அதிக செலவு செய்த பணித்திட்டத்தையும், மிகவும் ஒருங்கிணைந்த மனிதநேய பதிலையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும் என்று நினைக்கவில்லை என்று காரித்தாஸ் பிலிப்பீன்ஸின் செயலதிகாரி அருட்தந்தை எட்வின் கரிகுஸ் தெரிவித்துள்ளார்.

 

உறைவிடங்கள், வாழ்வாதார திட்டங்கள், சமூக ஒருங்கிணைபபுகள், சமூகம் டேலாண்மை செய்யும் பேரழிவு ஆபத்து குறைப்பு, இயற்கை அமைப்பு மீட்பு, கட்டங்களுக்கு அமைப்பு முறை ஆகியவற்றை வழங்குவதில் திருச்சபை முனைப்போடு செயல்பட்டுள்ளது.   

Add new comment

7 + 8 =