சூனியத்தில் நம்பிக்கையுடைய அமெரிக்கர்கள் அதிகரிப்பு


கடந்த 30 ஆண்டுகளாக சூனியத்தில் நம்பிக்கை கொள்ளும் அமெரிக்கர்கள் கணிசமாக அதிகரித்திருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவித்திருக்கிறது.

 

10 லட்சம் முதல் 15 லட்சம் பேர் வரை தாங்கள் வீக்கா அல்லது பல கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 

1990 மற்றும் 2008ம் ஆண்டுகள் நடத்தப்பட்ட கணக்கீட்டில் முறையே 8 ஆயிரம், 3 லட்சத்து 40 ஆயிரம் உறுப்பினர்கள் இருப்பதாக என்று மதிப்பிடப்பட்ட வீக்கா நம்பிக்கை உடையோரை விட இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.

 

2014ம் ஆண்டு பிவ் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் 0.4 விழுககாடு அமெரிக்கர்கள் தாங்கள் பல கடவுள் அல்லது வீக்கா நம்பிக்கை உடையோர் என கூறுகின்றனர். முந்தைய ஆண்டுகளில் இருந்ததைவிட கணிசமான அதிகரிப்பு இதுவாகும்.

 

துல்லியமாக தெரிவிப்பதாக இருந்தால், சுயமாக சூனியத்தில் நம்பிக்கை உடையோராக இருப்போர் இந்த எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கும் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட பிவ் அமைப்பின் தரவுகள் காட்டுகின்றன.

 

இந்த எண்ணிக்கை சில சீர்திருத்த சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

 

எடுத்துக்காட்டாக, 2017ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் பிரஸ்பிற்றேரியம் மதப்பிரிவினரின் எண்ணிக்கை 14 லட்சம் பேர் மட்டுமே.

Add new comment

8 + 5 =