சுற்றுலாவுக்கு தயாராகும் இயேசு திருமுழுக்கு பெற்ற இடம்


இயேசு கிறிஸ்து திருழுக்கு பெற்றதாக நம்பப்படுகின்ற ஜோர்டன் ஆற்றின் படுகையில் இருக்கும் தேவாலயங்கள் அனைத்தும் இன்னும் ஓராண்டில் திறக்கப்படும் என்று தெரிய வருகிறது.  

 

இந்த இடத்திலுள்ள ஆயிரக்கணக்கான நிலக் கண்ணிவெடிகளையும், போர் தளவாடங்களை வைக்கும் கிடங்குகளை அகற்றுவதில் முன்னேற்றம் இருப்பதால் இந்த இடத்தில் அமைந்துள்ள தேவாலயங்கள் விரைவில் திறக்க்பபடும் என்று கூறப்படுகிறது.

 

இந்த புனித இடத்தில் இருக்கின்ற வெடி பொருட்களை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இ்ஸ்ரேல் அரசும், சர்வதேச நிலக்கண்ணி வெடி அகற்றும் பணியாளர்களும் புகழ்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

 

ஜெரிக்கோ நகரின் கிழக்கில் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த புனித இடம், புதிய ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி புனித திருமுழுக்கு யோவான் இயேசு கிறிஸ்துவுக்கு திருமுழுக்கு வழங்கிய இடமாகும்.

 

இதனால், புண்ணிய பூமியில் கிறிஸ்தவர்களின் புனிதமான இடங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

 

எகிப்தில் இருந்து விடுதலை பயணம் மேற்கொண்டு 40 ஆண்டுகால பாலைவன வாழ்க்கைக்கு பிறகு இஸ்ரேலர் இந்த இடத்தில்தான் நதியை கடந்து வந்தார்கள் என்று பெருவாரியாக அறியப்படுகிறது.

 

இந்த இடத்தில் வைத்துதான் இறைவாக்கினர் எலியா விண்ணகத்திற்கு உடலோடு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்றும் நம்பப்படுகிறது.

 

இங்கு 250 ஏக்கர் நிலப்பரபில் கடந்த 50 ஆண்டுகளில் கட்டியமைக்க்பபட்டுள்ள பல கிறிஸ்தவ பிரிவுகளின் தேவாலயங்களை புணித பயணிகள் பார்த்து தரிசிக்கலாம்.

Add new comment

1 + 0 =