சுன்தா நீரிணையில் சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்டோருக்கு திருச்சபை உதவி


சுமத்திராவை பிரிக்கின்ற சுன்தா நீரிணை நெடுக கடலோர பகுதிகளில் மிக மோசமாக பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளை விநியோகிக்க இந்தோனீசியாவின் கத்தோலிக்க குழுக்கள் ஜாவாவின் கிழக்கு பகுதிக்கு சென்றுள்ளன.

 

பான்டென் மாகாணத்தின் பான்டெக்லாங் மற்றும் செராங் மாவட்டங்களையும், லாம்புங் மாகாணத்தின் தென் லாம்புங், பெசாவாரான் டான் டாங்காமுஸ் மாவட்டங்களையும் டிசம்பர் 22ம் தேதி பாதித்த சுனாமியால் குறைந்தது 437 பேர் உயிரிழந்தனர் என்று இந்தோனீசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் அறித்துள்ளது.

 

இன்னும் 16 பேரை காணவில்லை என்று ஜனவரி 2ம் தேதி இந்த நிறுவனம் கூறியுள்ளது.

 

14 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இந்த சுனாமியால் ஏற்பட்ட பேரழிவில் நிகழ்ந்த நிலச்சரிவு மற்றும் பேரிடர்களால் 34 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

 

அனாக் கராகாடோவ் எரிமலை வெடித்து சிதறி எரிமலை குழம்பை வெளியேற்ற தொடங்கியதால் இந்த சுனாமி பேரலை ஏற்பட்டது. இதனால் 25 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன.

Add new comment

6 + 0 =