சீன பத்தாண்டில் விடுதலை செய்யப்பட்ட சீன ஆயர், அருட்தந்தைகள்


சீனாவின் வடக்கில் அமைந்துள்ள ஹூபெய் மாகாணத்தின் நிழலுலக கத்தோலிக்க சமூகத்தின் ஓர் ஆயரும், இரண்டு அருட்தந்தையரும் சீன புத்தாண்டை (வசந்த விழா) முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

இவர்கள் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

 

சுயன்ஹூவா மறைமாவட்டத்தை சேர்ந்த துணை ஆயர் சுய் தாய், அருட்தந்தை சு குய்பெங் மற்றும் அருட்தந்தை சியாவ் ஹெ ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாத நடுவில் காணாமல் போய்விட்ட ஆயர் சுய், அதன் பிறகு எங்கிருந்தார் என்பது இதுவரை தெரியமல் இருந்து வந்தது.

 

புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 24ம் தேதி அவருடைய மூத்த சகோதரியை சந்திக்க அனுமதிக்கப்பட்டதாக ஜான் என்ற பெயருடையவர் தெரிவித்துள்ளார்.

 

ஆனால், மத செயல்பாடுகளை கடைபிடிப்பதில் இருந்து அவர் தடை செய்யப்பட்டுள்ளார்.

 

சமீத்திய ஆண்டுகளில் உடல் நலமின்றி இருந்து வரும் 68 வயதான ஆயர் சுய், கடும் வாயு தொல்லை மற்றும் 52 கிலோ என குறைவான எடையுடையவாராக வாழ்ந்து வருகிறார்.

 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் யாங்யுவான் வட்டத்தின் தொழில்துறை ஐக்கிய முன்னணி அதிகாரியால் கைது செய்யப்பட்ட தொங்செங் கத்தோலிக்க தேவாலயத்தில் பணிபுரிந்த அருட்தந்தை ட்சாவ், அரசின் புதிய மத கொள்கைகளை கற்க கட்டாயப்படுத்தப்பட்டார். அவரும் ஜனவரி 24ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

 

அரசு கொள்கைகளை அவர் கடைபிடிக்க செய்ய ஷாடிஃபாங் பங்கில் பணிபுரியும் அருட்தந்தை சு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வீட்டு காவலில் வைக்கப்பட்டார்.

 

டிசம்பர் 31ம் தேதி இல்லம் திரும்பிய அருட்தந்தை சு-வும் பங்கு விவகாரத்தை மேலாண்மை செய்ய தடைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

வத்திக்கானும் சீனாவும் ஆயர்கள் நியமனத்தில் தற்காலிக ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், சீனாவில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கத்தோலிக்கர்கள் மற்றும் நிழலுலக கிறஸ்தவர்களின் நிலைமைகளில் மிகவும் மெதுவாக காட்சிகள் மாறிக்கொண்டு வருகின்றன.

Add new comment

1 + 1 =