சீன நாட்டுக்கேற்றபடி மதத்தை மாற்றுவதை ஆதரிக்கும் ஆயர்


கம்யூனிச நாடான சீனாவுக்கு ஏற்றதாக மதத்தை உருவாக்க சீன கத்தோலிக்க நாட்டுப்பற்றாளர் கூட்டமைப்போடு இணைந்து பணிசெய்ய உறுதி ஏற்றிருப்பதாக சீன அரசு அங்கீகரித்துள்ள ஆயர்கள் பேரவையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

வேலைவாய்ப்பு துறையின் ஐக்கிய முன்னணியின் துணை அமைச்சர் வாங் சுவோயன், சீன கத்தோலிக்க நாட்டுப்பற்றாளர் கூட்டமைப்பு மற்றும் தலைநகரான பெய்ஜிங்கிலுள்ள சீனாவின் கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் பேரவையை சந்தித்த பின்னர், கும்மிங் மறைமாவட்ட ஆயர் ஜோசப் மா யாங்லின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

சீன கத்தோலிக்க நாட்டுப்பற்றாளர் கூட்டமைப்பும், சீனாவின் கத்தோலிக்க திருச்சபை ஆயர் பேரவையும், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசின் நம்பிக்கையை வாழ்ந்து காட்டும் என்று ஆயர் ஜோசப் மா யாங்லின் கூறியுள்ளார்.

 

இந்த புத்தாண்டில், கடினமாக உழைத்து, ஓர் இதயமாக இணைந்து, நன்றாக சிந்தித்து, நடைமுறைப்படுத்த கடின முயற்சிகள் மேற்கொண்டு, சூழ்நிலைக்கு ஏற்றப்படி பணிசெய்து, சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70வது ஆண்டு நிறைவில், சீன சிறப்பியல்போடு மதங்களை மாற்றுவதில் திருப்தியான முன்னேற்றங்கள் பெறவதை தொடர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.  

Add new comment

2 + 0 =