சீன அதிகாரிகளால் விடுதலை செய்யப்பட்டார் ஆயர் சாவ்


நிழலுலக ஆயர் ஒருவரும், அருட்தந்தை ஒருவரும் சீனாவின் ட்சஜியாங் மாகாணத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

வென்சௌவின் ஆயரான பீட்டர் சாவ் ட்ச்சுமின்னும், லிஷூ மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை லு டான்ஹூவாவும் நவம்பர் மாதத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

ஆயர் சாவ் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலும், இந்த அருட்தந்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலும் சீன அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

 

2016ம் ஆண்டு ஆயர் சாவ்வால் திருநிலைப்படுத்தப்பட்ட அருட்தந்தை லு, லிஷூ என்ற கத்தோலிக்கர் அரிதாகவுள்ள மறைமாவட்டத்திலுள்ள ஒரேயொரு அருட்தந்தையாவார்.

 

ஆயர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்ற காரணத்தை சீன அதிகாரிகள் தெரிவிக்காத நிலையில், அருட்தந்தை லு சட்டபூர்வமற்ற முறையில் சிங்தான் கத்தோலிக்க தேவாலயத்தில் திருப்பலி நிறைவேற்றியதற்காக கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add new comment

14 + 0 =