Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
சீனாவை கண்டு பயப்படும் நரேந்திரமோடி – ராகுல் காந்தி
இந்தியாவின் பலவீனமான தலைமையமைச்சர் நரேந்திர மோடி, சீன தலைமையமைச்சரை கண்டு அஞ்சுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ஜெய்ஷ் இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை சீனா தடை செய்ததை நரேந்திர மோடி கருத்து கூற மறுப்பதால் இந்த கருத்தை ராகுல் தெரிவித்துளார்.
ஜம்மு காஷ்மீர், புல்வாமாவில் கடந்த மாதம் 14-ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில்தான் பாலகோட் பகுதியில் செயல்பட்டுவரும் ஜெய்ஷ் இ-முகமது முகாம்கள் மீது இந்திய விமானப்படை பிப்ரவரி மாதம் 26-ம் தேதி குண்டுவீசி அழித்ததாகக் கூறப்பட்டது.
இந்த சூழலில், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி ஜெய்ஷ் இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டுமென கோரி அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன.
10 நாட்களுக்குள் ஐ.நா உறுப்பு நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தால், தீர்மானம் குறித்து ஆய்வு செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணி கடைசிநேரமாகும்.
ஆனால்,அதுவரை எந்த உறுப்பினர்களும் எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில் கெடுநேரம் முடியும் தருவாயில், சீனா தொழில்நுட்ப ரீதியாக சில கேள்விகளை முன்வைத்து தீர்மானத்தை நிறைவேற்றவிடாமல் தடுத்துவிட்டது.
மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கச் சீனா தடுப்பது இது 4-வது முறையாகும்.
இந்த சம்பவத்தில் சீனா குறித்து எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காமல் தலைமையமைச்சர் மோடி இருப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
Add new comment