சீனாவுக்கான கனடா தூதர் பதவி நீக்கம்


சீனாவுக்கான கனடா தூதர் ஜான் மெக்கலனை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவியிலிருந்து நீக்கியிருப்பதாக அறிவித்துள்ளார்.

 

சீனாவின் தொலைதொடர்பு நிவனமான ஹுவாவெய் நிறுவன தலைமை அதிகாரியை அமெரிக்கா கேட்டுகொண்டதன் பேரில் கனடா சில வாரங்களுக்கு முன்னர் கைது செய்தது.

 

இது பற்றி சர்ச்சையான கருத்தை மெக்கலன். கூறி இருந்த நிலையில், இப்போது அவர் பதவியில் இருந்து அக்ற்றப்பட்டுள்ளார்.

 

உலக அளவில் பெரிய தொலைத்தொடர்பு கருவிகள் மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்று ஹூவாவெய் ஆகும்.

 

ஆனால், இதனை பயன்படுத்தி சீனா பிற நாட்டு ரகசியங்களை அறிந்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

 

எனவே, சில நாடுகள், ஹூவாவெய் நிறுவனத்தின் கருவிகளை வாங்குவதை நிறுத்தி வைத்துள்ளன.

Add new comment

4 + 10 =