சீனாவில் மனித உரிமை வழக்கறிஞருக்கு 4 ஆண்டு சிறை


சீனாவில் மனித உரிமை வழக்கறிஞர் ஒருவருக்க நான்கு  ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

அவருக்கு வழக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.

 

சீனாவில் தடை செய்யப்பட்ட ஃபலுன் கனக் அமைப்பை பின் தொடர்பவரும், சீனாவில் நிலம் கையகப்படுத்துவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்த பிரபல மனித உரிமை வழக்கறிஞரான 42 வயதான வாங் குவன்சாங்-கிற்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது. 2015 ஆம் ஆண்டில் வாங் சமூக ஆர்வலருடனும் போராட்ட நிகழ்வு ஒன்றில் கைது செய்யப்பட்டிருக்கிறார்  என்று சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

அரசு அதிகாரத்தை உடைக்க முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் வாங் குவன்சாங்-கிற்கு நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனையை தியன்ஜிங் நகர நீதிமன்றம் விதித்துள்ளது.

 

மேலும் ஐந்து ஆண்டுகள் அரசு உரிமைகள் அனைத்தும் அவருக்கு மறுக்கப்படுவதாகவும் தீர்ப்ப அளிக்கப்பட்டுள்ளது.

 

இந்தத் தீர்ப்பு அநீதியானது என்று சீனாவின் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Add new comment

8 + 0 =