சீனாவில் மத சுதந்திரம் மிகவும் மோசமான 2018ம் ஆண்டு


சீனாவில் மத சுதந்திரத்திற்கு மிகவும் மோசமான ஆண்டு 2018ம் ஆண்டு என தெரிவிக்கப்படுகிறது.  

 

கடந்த ஆண்டு 10 லட்சத்திற்கும் அதிமான உய்கூர் முஸ்லிமகள் தடுப்பு முகாம்களில் அரசியல் கருத்துக்களை மூளை சலவை செய்ய அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

சீனாவின் மத்தியிலுள்ள ஹெனான் மாகாணத்தில் அரசே கத்தோலிக்க தேவாலயங்களை மூடியுள்ளது.

 

மேலு்ம் “ஃபாலுன் கொங்” மதப்பிரிவின் நம்பிக்கையாளர்கள் கடும் கட்டுப்பாட்டுக்கு உள்ளாயினர்.

 

இவ்வாறு சீன கம்யூனிஸ்ட் கட்சி மத சுதந்திரம், கருத்து சுதந்திரம் மற்றும் பிற அடிப்படை உரிமைகள் சர்வாதிகாரி அதிபர் ஷி ஜின்பிங் ஆட்சியில் பறிக்கப்பட்டுள்ளன என்று கூறி சுதந்திர கண்காணிப்புக்கான சுயாதீன நிறுவனம் சீனாவுக்கு 100-க்கு வெறும் 11 புள்ளிகளைதான் வழங்கியுள்ளது.

 

“2019ம் ஆண்டில் உலக சுதந்திரம்” என்று தலைப்பிடப்பட்ட இந்த அறிக்கையில், சீனாவிலுள்ள மத நம்பிக்கையாளர்கள் அவர்களின் இறைநம்பிக்கையை கடைபிடிப்பது மத தொடர்பு, இடம் மற்றும் பதிவு தகுநிலை ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த அறிக்கையில், ஓரளவு சாவாதிகார காலத்தில் நுழைந்துள்ளதாக கத்தோலிக்க பணிக்குழு ஒன்று தெரிவித்திருக்கும் ஹாங்காங்கும், திபெத்தும் உள்ளடங்கவில்லை.

 

சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் ஆட்சி அடக்குமுறை மிக்கதாக வளர்ந்துள்ளதாக இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

 

மதத்தால் சித்ரவதை செய்யப்படுகின்ற நிலைமையை கதிவு செய்யாத இந்த அறிக்கை சீனாவில் முஸ்லிம்கள் அதிக துன்பங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add new comment

11 + 2 =