சீனாவில் இருந்து இறக்குமதி - ஐபோனுக்கு 10 சதவீத கூடுதல் வரி


சீனாவில் தயாரித்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.  

 

அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்,  மடிக்கணினிகள் சீனாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

 

எனவே, இந்த இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

 

அமெரிக்காவில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் அதிகரிக்க டிரம்ப் எடுத்துவருகின்ற நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கையும் வருகிறது.

 

இதனால், ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 1.6 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளன.

 

மேலும், சீனாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா சீனா மீது தொடர்ந்து பல பொருளாதாரத் தடைகளை சுமத்தி வருகிறது.

Add new comment

4 + 2 =