சீனாவின் நிழலுலக திருச்சபையில் பீதியை கிளப்பும் சட்ட நடவடிக்கை


மதங்களின் இடங்களுக்கு சட்ட தகுநிலையை உறுதி செய்யக்கூடியதாக நாடு எடுக்கின்ற நடவடிக்கை, சீனாவி்ல் அரசு அங்கீகாரம் பெறாமல் இருக்கின்ற நிழலுலக திருச்சபையை அழித்துவிடும் என்று சீன கத்தோலிக்கர்கள் அஞ்சுகின்றனர்.

 

மத விவகாரங்களுக்கான சீன நிர்வாகமும், பொது விவகார அமைச்சகமும் இணைந்து, எல்லா மத இடங்களை சொந்தமாக வைத்திருப்போர் அனைவரும் சட்டபூர்வ நபர் என்கிற தகுநிலைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று பிப்ரவரி 12ம் தேதி கூட்டாக அறிவித்தன.

 

ஏப்ரல் முதல் தேதிக்குள் இந்த சட்ட அனுமதியை எல்லா மத இடங்களும் பெற்றிருக்க வேண்டும்.

 

இத்தகைய பதிவுகள் சீனாவில் மறைவாக செயல்பட்டு வருகின்ற நிழலுலக திருச்சபையை முற்றிலும் அழித்துவிடும் என்று அதிகாரபூர்வ திரு்சசபையை சேர்ந்த பால் என்பவர் தெரிவித்துள்ளார்,

 

நிழலுலக திருச்சபை பதிவு செய்துகொள்ள வேண்டுமென முன்னதாக அதிகாரிகள் மிரட்டியிருந்தனர். ஆனால், அது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

 

இப்போது அறிவிப்பு வந்துவிட்டது. சட்டபூர்வ நபர் அமைப்பு முறை நிழலுலக அருட்தந்தையர் சீன கத்தோலிக்க நாட்டுபற்றாளர் கூட்டமைப்பில் இணைய வேண்டுமென மிரட்டுவதற்கு பயன்படும் தளமாக உருவாகும்.

 

அவ்வாறு செய்யாவிட்டால், சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்களாக முத்திரை குத்தப்படுவர். இதனால், நிழலுலக திருச்சபை முற்றிலுமாக அழிய வாய்பபுள்ளது என்று பால் தெரிவி்க்கிறார்.

 

இத்தகைய அமைப்பு முறை திருச்சபையின் சொத்துக்களையும் பாதிக்கும். இந்த மத இடத்தின் சொந்தக்காரராக இந்த சட்டபூர்வ உரிமையாளர் இருப்பார். இந்த சட்ட தகுநிலை உடையவர் கையெழுத்து போட்டால்தான் திருச்சபை இந்த சொத்தை விற்க முடியும் நிலை உருவாகும்.

 

இந்த நோட்டீஸில் மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் பிற மத இடங்கள் பற்றிய 14 அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன.

 

மத இடங்கள் சட்ட தகுநிலை உடைய நபரை பதிவு செய்ய வேண்டும்.

 

நாட்டின் விதிமுறைகளுக்கு ஏற்ப நிதி மேலாண்மை, சொத்துக்கள், தணிக்கைகள் நடைபெற வேண்டும்.

 

சிறந்த விதிமுறைகளோடு ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனங்களின் வரையறையை இவை நிறைவு செய்ய வேண்டும் என்பன இந்த அம்சங்களில் ஒரு சில.

Add new comment

5 + 0 =