சீனாவின் சின்சியாங் தடுப்பு முகாம்களை எதிர்க்கும் ஐநா


பத்து லட்சத்திற்கு அதிகமான துருக்கிய முஸ்லிம்களை சீனா தன்னிச்சையாக தடுத்து முகாம்களில் அடைத்து வைத்துள்ளது தொடர்பாக உண்மை கண்டறியும் சர்வதேச குழுவை உருவாக்க ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென 16 மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக நிறுவனங்கள் அழைப்புவிடுத்துள்ளன.

 

இந்த முஸ்லிம்களை நீதிக்கு புறம்பாக அரசியல் கருத்துக்களை மூளை சலவை செய்கின்ற முகாம்கள் சீனாவின் வட மேற்கிலுள்ள சின்சியாங் பிரதேசம் முழுவதும் காணப்படுவதாக இவை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சின்சியாங்கில் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்படவில்லை என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ள சீனா 2018ம் ஆண்டு நவம்பர் மாத மீளாய்வின் விளைவுகளை பிப்ரவரி 25ம் தேதி தொடங்குகின்ற அடுத்த அமர்வ பரிசீலிக்க உள்ளது.

 

சீனாவில் சகித்து கொள்ள முடியாத கண்காணிப்பு நடைபெறுவதாக குற்றஞ்சாட்டப்படும் அதிக உரிமை மீறல்கள் ஐநா மனித உரிமை கவுன்சிலுக்கு தெரிய வந்துள்ளது என்று இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ள மனித உரிமை கண்காணிப்பகத்தின் செயலதிகாரி கென்னத் ரோத் கூறியுள்ளார்.

 

மேலும், உலக மன்னிப்பு சபை, உலக உய்கூர் காங்கிரஸ் மற்றும் மனித உரிமைகளுக்கான சர்வதேச கூட்டமைப்பு இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.

 

மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புணர்வை சீனா அதனுடைய உறுப்பினர் நிலை அல்லது பொருளாதார பலத்தால் மறைத்து கொள்வதை அனுமதிக்க கூடாது என்று மனித உரிமை கவுன்சில் கோரியுள்ளது.

 

இந்த முகாம்களில் எந்தவொரு சரியான நடைமுறையும் இல்லாமல் இந்த அரசியல் மூளை சலவை நடத்தப்படுவதாக சீன அதிகாரிகளை இந்த அறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது.

Add new comment

6 + 1 =