சிலுவை வைக்கப்பட்ட கல்லறைகள் இந்தோனீசியாவில் சேதம்


இந்தோனீசியாவின் மத்திய ஜாவாவில் பொதுக் கல்லறை ஒன்றில் சிலுவை அடையாளங்கள் இருக்கும் கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டது தொடபாக புலணாய்வு ஒன்றை இந்தோனீசிய காவல்துறை தொடங்கியுள்ளது.

 

கடந்த டிசம்பர் மாத இறுதியில் மகேலாங் நகரிலுள்ள கிரிலோயோ கல்லறையிலுள்ள குறைந்தது 11 கிறிஸ்தவ கல்லறைகள் சேதமடைந்திருந்தன.

 

மகேலாங் நகரின் தெற்கிலுள்ள பொதுக் கல்லறையில் மேலும் 7 கிறிஸ்தவ கல்லறைகள் சேதமடைந்திருந்தன.

 

யோக்யாகார்தாவிலுள்ள பொது கல்லறை ஒன்றில் இறந்த ஒரு கிறிஸ்தவரை அடக்கம் செய்யவதற்கு முன்னால், கல்லறையின் மேற்பகுதியில் இருந்த சிலுவையை அகற்றினால்தான் அனுமதிக்க முடியும் என்று முஸ்லிம் குழு ஒன்று கட்டாயப்படு்த்திய 2 வாரங்களுக்கு பின்னர், இவ்வாறு சிலுவைகள் வைக்கப்பட்ட கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

 

இந்த சம்பவங்கள் நிகழ்ந்த இடங்கில் இருந்து காவல்துறையினர் சான்றுகளை சேகரித்து வருவதாகவும், கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்பட கல்லறை பாதுகாப்பு பணியார்கள் மற்றும் உள்ளூர்வாசிகளிடம் இருந்து காவல்துறையினர் தகவல்களை திரட்டி வருவதாகவும், மகேலாங் காவல்துறை தலைவர் கிறிஸ்டான்டோ யோகா டார்மாவான் கூறியுள்ளார்.

 

சரியான விசாரணையை மேற்கொள்வதற்கு முன்னால், குறிப்பிட்ட மதத்தினர்தான் இதற்கு காரணம் என்று முன்னரே தவறாக அனுமானித்து கருத்து வெளியிட வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.

 

அவ்வாறு செய்தால், ஏப்ரல் மாதம் நடைபெறுகின்ற தேசிய தேர்தலுக்கு முந்தைய அரசியல் பரப்புரையாக அது அமைந்துவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.   

Add new comment

4 + 7 =