சிறுபான்மையினருக்கு ஆணையம் தொடங்கிய பாகிஸ்தான் செயற்பாட்டாளர்கள்


பாகிஸ்தானிலுள்ள மத சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்கின்ற ஆணையம் ஒன்றை அந்நாட்டின் மனித உரிமை செயற்பாட்டாளர்களும், பல்வேறு மத நிறுவனங்களும் இணைந்து லாகூரில் ஒன்றுகூடி தொடங்கியுள்ளன.

 

இவ்வாறு தொடங்கப்பட்டுள்ள சிறுபான்மையினருக்கான மக்களின் ஆணையத்தில் பாகிஸ்தான் கத்தோலிக்க ஆயர்களின் நீதி மற்றும் அமைதிக்கான தேசிய ஆணையமும், சிசில் மற்றும் ஆயர்லாந்து சௌத்திரி பவுண்டேஷனும் இணைந்துள்ளன.

 

இந்த ஆணையத்தில் சீக்கியர்கள், இந்து மற்றும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளடஙகியுள்ளனர்.

 

இவ்வாறு தொடங்கப்பட்டுள்ள புதிய ஆணையம், அரசியல் சாசன மத சுதந்திரம், சிறுபான்மையினரின் உரிமைகளும், நலன்களும், சிறுபான்மையினருக்கான சர்வதேச கடமைகைள் ஆகியவற்றை உறுதி செய்ய மத்திய மற்றும் மாகாண அரசுகளுக்கு அழுத்தங்களை வழங்கும் என்று சமூக நீதி மையத்தின் கத்தோலிக்க இயக்குநர் பீட்டர் ஜேக்கப் கூறியுள்ளார்.

Add new comment

3 + 13 =