சிரியா: இஸ்லாமிய அரசு தீவிரவாத குழுவின் கடைசி வலுவிடத்தில் போர்


சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் கடைசி வலுவிடத்தில், இந்தக் குழுவுக்கும் அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் சிரியா ஜனநாயக படைக்கும் இடையில் கடும் போர் நடைபெற்று வருகிறது.

 

சிரியாவின் கிழக்குப் பகுதியில், இராக் எல்லைக்கு அருகே அமைந்துள்ள பாகூஸ் என்ற இந்த கிராமம் அமெரிக்க ஆதரவு பெற்ற படைகளின் வசமாகும் நிலை தோன்றியுள்ளதாக கூறப்படுகிறது.

 

அப்படியானால், இஸ்லாமிய அரசு என தங்களை அறிவித்து கொண்ட இந்த தீவிரவாத குழுவினர் முற்றிலும் அழிப்பட்டு விட்டதாக அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஆனால், இந்தப் பகுதியை ஐ.எஸ். இழந்து விட்டாலும், உலகின் பிற பகுதிகளில் தாக்குதல்களை நடத்தும் ஆறறலுள்ள அமைப்பாகவும், பாதுகாப்பு அச்சுறுத்தலாகவும் நீடிக்கும் என்று ஆய்வாளாகள் கருதுகிறார்கள்.

Add new comment

1 + 3 =