சிரியாவுக்கு முழு பாதுகாப்பே இலக்கு – ஈரான்


உள்நாட்டு போரில் சிக்கியுள்ள சிரியாவுக்கு முழுமையான பாதுகாப்பு மற்றும் ஸடதிரத்தையும் வழங்குவதே ஈரானின் குறிக்கோள் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

 

'ஈரான் முக்கியமான வெளியுறவுக் கொள்கைகளில் சிரியாவில் ஸ்திரதன்மையை உருவாக்குதல், முழுமையான பாதுகாப்பை வழங்குவதை முக்கிய இலக்குகளாக வைத்துள்ளது.  

 

சிரியா பழைய இயல்பு நிலைக்குத் திரும்பி, சிரிய மக்கள் அவர்களது வாழ்க்கையை சுதந்திரமாக வாழ வேண்டும் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறியுள்ளார்.

 

சிரியாவை நீண்ட நாட்களாக ஆண்டுவரும் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகிறார்கள்.

 

சுமார் ஆறு ஆண்டுகளாக நடக்கும் சிரிய போரில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யாவும் ஆதரவு அளித்து வருகின்றன.

 

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பகுதிகளை சிரிய அரசுப் படைகள் கைப்பற்றியுள்ள நிலையில்,  மீதமுள்ள பகுதிகளைக் கைப்பற்ற இறுதிக்கட்டப் போர் நடைபெற்று கொண்டிருக்கிறது.

Add new comment

3 + 9 =