சிபு மத விழாவில் தடை செய்யப்பட்ட அரசியல்


பிலிப்பீன்ஸின் மிக மோசமான அரசியல் குடும்பத்தின் வாரிசு சிபு நகரத்தின் “சினுலாக்” எனப்படும் குழந்தை இயேசு பெருவிழாவை நிறுத்த முயல்வதாக அந்நகர மேயர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

ஜனவரி 18ம் தேதி இமீ மார்கோஸின் பெரிய பதாகையை அதிகாரிகள் அகற்றிவிட்டனர்.

 

இந்த ஆண்டு நடைபெறுகின்ற செனட் இடைத்தேர்தல்களில் போட்டியிடுகின்ற ஒரு வேட்பாளர் இந்த மத பெருவிழாவில் அரசியல் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இவ்வாறு இந்த பெருவிழா அரசியல்மயமாவதை சிபு மக்கள் விரும்பவில்லை என்று இந்த நகரத்தின் மேயர் தாமஸ் அஸ்மினா கூறியுள்ளார்.

 

இதனால் வாக்குகள் அதிகம் கிடைக்காது. நன்மையை விட அதிக தீமையே விளையும் என்று இந்த மேயர் தெரிவித்திருக்கிறார்.

 

1960களின் தொடக்கத்தில் இருந்து பிலிப்பீன்ஸை இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஆட்சி செய்த முன்னாள் அதிபர் பெர்டினன்ட் மார்க்கோஸ் மற்றும் ஊழல் செய்ததாக நீண்டகால சிறை தண்டனையை எதிர்கொண்டு வரும் நாட்டின் முன்னாள் முதல் பெண்மணி இமெல்டா மார்க்கோஸின் மகள்தான் இமீ மார்க்கோஸ்..

 

இமீ மார்க்கோஸின் பதாகையை அகற்றியிருப்பதன் மூலம் அவருக்கு நண்மையே புரிவதாக இந்த மேயர் தெரிவித்திருக்கிறார்.

Add new comment

7 + 4 =