சிட்னி நகரில் வரலாறு காணாத மழை


ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகராக இருக்கும் சிட்னியில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.

 

வழக்கமாக ஒரு மாதம் பொழிய வேண்டிய மழை புதன்கிழமை மட்டுமே பெய்து விட்டதால், சாலைகள் வெள்ளக்காடக காட்சி அளிக்கின்றன.  

 

மழை நீர் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடிவதையும் காணமுடிகிறது.

 

கடும் போக்குவரத்து நெரிசல், பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன, சுரங்கப்பாதைகளில் மழைநீர் புகுந்ததால் அவதி பல சிரமங்களை மக்கள் சந்தித்துள்ளனர்.

 

சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

 

நவம்பர் மாதம் சிட்னி 84 மில்லி மீட்டர் மழை பெய்வது வழக்கம். ஆனால், புதன்கிழமை மட்டும் 106 மி.மீ. மழை பெய்துள்ளது.

 

சிட்னி நகரிலுள்ள சுரங்க தொடர்வண்டி மற்றும் பிற தொடர்வண்டி போக்குவரத்து முழுவதும் ரத்தாகின. விமான நிலைய ஓடுபாதைகளில் நீர் சூழ்ந்ததால், பல விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

 

கிழக்கு குயின்ஸ்லாந்து, நார்த்தன் நியூ சவுத்வேல்ஸ், மவுரியா, நியூகேஸில், சிட்னி, இலாவாரா, கிராப்டன், பிரிஸ்பன் ஆகிய நகரங்களுக்கு ஆஸ்திரேலிய வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Add new comment

5 + 7 =