சிக்குவாரா மாலத்தீவின் முன்னாள் அதிபர் யாமீன்


மாலத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் மீது பண மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

அவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்வதற்கு அரசு தலைமை வழக்கறிஞரை மாலத்தீவு அரசு கோரியுள்ளது.

 

யாமீனும், அவரது கூட்டாளி ஒருவரும் நாட்டின் பொதுப் பணத்தை திருடியதாகவும், மோசடியில் ஈடுபட்டதாகவும் காவல்துறை நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

அதிக பணத்தொகை வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள மில்லியன் கணக்கான டாலர்களை கண்டுபிடிப்பதற்கு வெளிநாட்டு அரசுகளின் உதவியை மாலத்தீவு நாடிவருவதாகவும் தெரிகிறது.

 

கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எதிர்பாராத விதமாக அப்துல்லா யாமீன் தோல்வியடைந்தார்.

 

ஆனால், ராணுவத்தின் சக்தியை பயன்படுத்தி, அதிகார பரிமாற்றத்திற்கு அவர் இடையூறு ஏற்படுத்தலாம் என்ற பயம் தொடக்கத்தில் நிலவியது.

 

ஆனால், எதிர்பார்த்தப்படி அல்லாமல், சுமூக அதிகார பரிமாற்றம் அங்கு நடைபெற்றது.

 

கடந்த டிசம்பர் மாதம் யாமீனோடு தொடர்படையதாக கூறப்படும் வங்கி கணக்கிலுள்ள 6.5 மில்லியன் டாலரை நீதிமன்றம் முடக்கிவிட்டது.

 

தற்போதைய அரசு மூலம் மாலத்தீவு மீது சீனா கொண்டிருந்த பிடி சற்று தளர்ந்துள்ளது.

Add new comment

2 + 0 =