சாலையில் இயேசுவை சந்தியுங்கள் – திருத்தந்தை


சாலையில் இயேசுவை சந்தியுங்கள் என்று குருமாணவர்களுக்கு திருத்தந்தை பிரானசிஸ் அறிவுறுத்தியுள்ளார்.

 

இயேசு கிறிஸ்து சீடர்களிடம் கடவுளை கண்டறிய உதவி, அவர்களை மறைபரப்புக்கு அனுப்பிய எம்மாவுஸ் பயணம் பற்றிய நற்செய்தி பகுதியை குருமட அனுபவங்களோடு ஒப்பிட்டு திருத்தந்தை இந்த அறிவுரையை வழங்கியுள்ளார்.

 

வத்திக்கானில் வைத்து சிசிலி நாட்டின் அக்ரிஜென்டோ உயர் மறைமாவட்ட குருமாணவர்களை சந்தித்தபோது திருத்தந்தை பிரானசிஸ் இந்த அறிவுரையை வழங்கியுள்ளார்.  

 

இயேசு எம்மாவுஸ் பாதையில் சீடாகளோடு நடந்ததை அடையாளமாக வைத்து குருமட அனுபவத்தை திருத்தநதை பிரான்சிஸ் விளக்கி கூறியுள்ளார்.  

Add new comment

2 + 13 =