சாப்பிட எதுவுமில்லை – அசியா பீபியின் குடும்பத்தினர்


அசியா பீபியோடு அவரது குடும்பத்தினரின் வாழ்க்கை அச்சுறுத்தலில் இருப்பதால், தாங்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற சர்வதேச சமூகம் உதவ வேண்டும் என்று அசியாவின் கணவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

கடந்த புதன்கிழமை மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட அசியா பீபி கொல்லப்படுவார் என்று மிரட்டல் விடுக்கும் ரகசிய தொலைபேசி அழைப்புகளை இன்னும் பெற்று வருவதாக தேவையில் உழல்வோருக்கான திருச்சபை எனப்படும் கத்தோலிக்க உதவி நிறுவனத்திடம் பேசுகையில் அஷிக் மசிக் தெரிவித்துள்ளார்.

 

பாகிஸ்தானில் இருந்து வெளியேற எங்களுக்கு உதவுங்கள். எங்கள் வாழ்க்கை ஆபத்தில் இருப்பதால் நாங்கள் அச்சம் அடைந்துள்ளோம். உணவை வாங்குவதற்கு வெளியே செல்ல முடியாது என்பதால், சாப்பிடுவதற்குகூட ஒன்றுமில்லாமல் தவிக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

அசியா பீபி விடுதலை செய்யப்பட்ட பின்னர் ஏற்பட்ட வன்முறை போராட்டங்களால், இந்த குடும்பத்தினர் ரகசியமாக பதுக்கி வாழ் வேண்டியுள்ளது.

Add new comment

9 + 0 =