சர்வதேச போலீஸ் அமைப்பின் தலைவராகும் தென் கொரியர்


சர்வதேச காவல்துறையின் (இன்டர்போல்) தலைவராக தென்கொரிய வேட்பாளர் கிம் ஜோங்-யாங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

இந்த தேர்தலில் வெற்றி பெறுபவராக எதிர்பார்க்கப்பட்ட ரஷ்ய வேட்பாளர் அலெக்ஸாண்டர் புரொகோப்சக் தோல்வியை தழுவியுள்ளார்.

 

194 நாடுகள் அங்கத்தினராக இருக்கின்ற சர்வதேச காவல்துறையின் தலைவர் தேர்தல் துபாயில் நடந்த அந்த அமைப்பின் ஆண்டுக்கூட்டத்தில் நடைபெற்றது.

 

தோல்வியடைந்த ரஷ்ய வேட்பாளர் அலெக்ஸாண்டர் புரொகோப்சக் தற்போது துணைத் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

 

ரஷ்ய வேட்பாளரின் பெருமையைக் சீர்குலைக்கும் வகையில் பரப்புரை நடைபெற்றுள்ளதால் அவர் தோல்வியடைந்துள்ளதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.

 

இதன் தலைவராக இருந்த சீனரான மெங் ஹோங்வெய் கடந்த செப்டம்பர் மாதம் சீனா சென்றிருந்தபோது காணாமல் போனார். கையூட்டு பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக சீனா பின்னர் உறுதிசெய்ததை தொடர்ந்து புதிய தலைவர் தேர்தல் நடைபெற்றுள்ளது.

Add new comment

8 + 4 =