சரியான நேரத்தில் இந்தியாவுக்கு பதிலடி – பாகிஸ்தான் எச்சரிக்கை


இந்தியாவுக்கு சரியான நேரத்தில் தக்க பதிலடி வழங்கப்படும். அதற்கான இடம் விரைவில் முடிவு செய்யப்படும் என்று  பாகிஸ்தான் தலைமையமைச்சர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

 

இந்திய விமான படையின் தாக்குதலை சரியான கையாண்ட பாகிஸ்தானிய விமானபடைக்கும் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

மேலும், எத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ளவும் தயாராக இருக்ன படைகளுக்கு அவர் ஆணையிட்டுள்ளார்.

 

இந்நிலையில், காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு பகுதியை மீறிவிட்டதால் இதற்கு தகுந்த பதிலடி கொடுப்பதற்கு, பாகிஸ்தானுக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மகமூத் குரேஷி தெரிவித்திருக்கிறார்.

 

செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் மூன்று முதல் நான்கு மணி அளவில், ஐந்து முறை வெடிச்சத்தங்கள் கேட்டதாக  பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட மன்ஷெரா மாவட்டத்தை சேர்ந்த மக்கள் கூறியுள்ளனர்.

 

மேலும், இந்தியாவில் விரைவில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில், அரசியல் ஆதாயம் தேடிக்கொள்வதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்க்பட்டுள்ளது.

Add new comment

18 + 2 =