சபரிமலை விவகாரம் –ரெஹானாவை பதவி நீக்கியது பிஎஸ்என்எல்


மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் பதிவிட்டதாக கூறி செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமாவை பிஎஸ்என்எல் நிறுவனம் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது.

 

பெண்களின் அனைதது வயதினரும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழையலாம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பின்னர், இந்த கோயிலுக்குள் நுழைய முயன்று திருப்பி அனுப்பப்பட்டவர்தான் ரெஹானா பாத்திமா

 

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன.

 

ஹைதராபாத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி செய்தியாளர் கவிதாவும், பெண்ணியவாதி ரெஹானா பாத்திமாவும் ஏறக்குறைய சன்னிதானத்தை நெருங்கிய நிலையில், பக்தர்கள், கோயில் தந்திரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர்கள் மலையில் இருந்து கீழே இறக்கப்பட்டனர்.

 

முதலில் வேறு கிளைக்கு மாற்றம் பெற்ற ரெஹானா பாத்திமாவை தற்போது பிஎஸ்என்எல் தற்காலிக பணிநீக்கம் அளித்துள்ளது.

 

பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ரெஹானா பாத்திமா பதிவிட்டதாக காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

Add new comment

2 + 0 =