சபரிமலையில் மந்திரங்கள் ஓதி போராட்டம்


சபரிமலையில் மந்திரங்கள் ஓதி போராட்டம் நடத்திய பக்தர்களை இரவிலேயே கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

 

கேரளாவிலுள்ள பிரபல சபரிமலை ஐயப்பன் கோவில், மண்டல மாகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது.

 

சிறப்பு பூஜை செய்ய 41 நாட்கள் நடை திறந்திருக்கும்.

 

பாதுகாப்புக்காக காவல்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

 

வழக்கமாக அதிக மக்கள் வருகின்ற சபரிமலைக்கு இப்போது பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

 

கூட்டமாக வருகின்ற, கரகோஷம் எழுப்புகின்ற பக்கதர்கள் மீது காவல்துறை தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

சபரிமலையிலுள்ள வவார் நாடா பகுதியில் சனிக்கிழமை இரவு மந்திரங்கள் ஓதி ஐயப்ப பக்தர்கள் போரட்டம் நடத்தினர்.

 

அவர்கள் விதிமுறைகளை மீறிவிட்டதாக கூறி 60க்கும் மேற்பட்ட பக்தர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

பம்பபைக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்ட்ட அவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

 

இந்த கைது சம்பவத்தால் சபரிமலையில் மீண்டும் பதற்றம்  ஏற்பட்டுள்ளது.

Add new comment

1 + 0 =