சபரிமலையில் பெண் காவலர்கள் தரிசனம் செய்ததால் சர்ச்சை


சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண் காவலா்கள் சாமி தரிசனம் செய்த விவகாரம் சா்ச்சையாக உருவாகியுள்ளது.  

 

சபரிமலை ஐயப்பன் கோவில் சித்திரை திருவிழா சிறப்பு பூஜைகளுக்காக திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

 

கடந்த மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறையினா் நடத்திய தடியடி சா்ச்சையை தோற்றுவித்ததால், மீண்டும் அதுபோன்ற சூழல் உருவாகிவிடாமல் இருப்பதற்கு பத்தினம் திட்டா, நிலக்கல், சன்னிதாம், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இதுவரை இல்லாத வகையில் சன்னிதாம் பகுதியில் பெண் காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

 

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் பெண் காவலர்களில் சிலா் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனா்.

 

வயது சரிபார்க்கப்பட்ட பின்னர், 15 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலர்களே கோவிலுக்குள் சென்றார்கள். அவா்களது விருப்பத்தின் பேரில் ஐயப்பனை தரிசித்ததாக காவல்துறை விளக்கம் அளித்திருக்கிறது.

Add new comment

6 + 2 =