சபரிமலையில் அனைத்து வயது பெண்கள் வழிபட தடை விதிக்க மறுப்பு


சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

ஆனால், இது தொடர்பான சீராய்வு மனுக்களை உச்ச நீதின்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

 

அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி இந்த மனுக்களின் சீராய்வு விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த 28ஆம் தேதியன்று தீர்ப்பளித்திருந்தது.

 

இந்த தீர்ப்புக்கு எதிராக தடை விதிக்க முடியாது என்று இப்போது  தெரிவிக்க்பபட்டுள்ளது.

 

மாதவிடாயை காரணம் காட்டி 10 முதல் 50 வரை உள்ள பெண்களுக்கு சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

Add new comment

11 + 1 =