கோவையிலுள்ள கத்தோலிக்கர்களை கவராத காஸ்மிக் விவசாயம்


அமோக விளைச்சலை பெறுவதற்கு முற்கால இந்து வாசகங்களை ஓத வேண்டும் என்று இந்து பாரதிய ஜனதா கட்சி விவசாயிகளை அறிவுறுத்தியுள்ளது.

 

ஆனால், முன்னாள் போர்ச்கீசிய காலனியான இந்தியாவின் கோவாவிலுள்ள கத்தோலிக்கர்களுக்கு இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

 

18 லட்சம் பேர் வாழும் கோவாவில், 66 சதவீதத்தினர் இந்துக்களாகவும், 25 சதவீதத்தினர் கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர். அதில் பெரும்பான்மையினர் கத்தோலிக்கர்களாகும்.

 

அமோக அறுவடையை பெறுவதற்காக காஸ்மிக் விவசாயம் என்று அரசு கூறுவதை வளர்க்க அனைவரையும் அறிவுறுத்தி வருகிறது.

 

முற்கால வேதங்களிலுள்ள மந்திரங்களை ஓதுவதே காஸ்மிக் விவசாயம் என்று கூறப்படுகிறது.

 

பயிர்கள் வளருகின்றபோது, விவாசாயிகள் ஒவ்வொரு நாளும் இந்த மந்திரங்களை குறைந்தது 20 நிமிடங்கள் ஓத வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

 

இத்தகைய செபங்கள் மட்டும் அமோக விளைச்சலை வழங்காது என்று கத்தோலிக்கர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

செபங்களோடு கடின உழைப்பு, அர்ப்பணம், தொழில்நுட்பம், குறைந்தபட்ச இயற்கை தேவைகள் சிறந்த அறுவடையை வழங்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.    

Add new comment

11 + 2 =