கோவா மாநில முதல்வர் பாரிக்கருக்கு இறுதிச்சடங்கு– நள்ளிரவில் புதிய முதல்வர்


கோவா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கருக்கு இறுதிச்சடங்கு நிறைவேற்றிய அன்று நள்ளிரவே புதிய முதல்வர் பதவியேற்றுள்ளார்.

 

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மனோகர் பாரிக்கர் காலமானார்.

 

திங்கள்க்கிழமை மாலை இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, அரசு மரியாதையுடன் பாரிக்கர் உடல் மிராமர் கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது.

 

அன்றிரவே கோவா மாநில சட்டப்பேரவை தலைவராக பதவி வகித்து வந்த பிரமோத சாவந்த் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

 

40 உறுப்பினர்கள் கொண்ட கோவா சட்டமன்றத்தில் பாஜக 12, காங்கிரஸ் 15 உறுப்பினர்கள் இருக்கின்றனர். கோவா பார்வர்டு கட்சி 3, எம்.ஜி.பி 3, சுயேட்சைகள் 3 பேர் உள்ளனர்.

 

இந்த சிறிய கட்சிகளின் 9 உறுப்பினர்களுடன் கூட்டணி சேர்ந்து, மொத்தம் 21 உறுப்பினர்கள் உடன் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது.

Add new comment

10 + 9 =